மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “பழைய குலக்கல்வி திட்டத்தின் புதிய பதிப்புதான் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை. தாழ்த்தப்பட்ட மக்கள்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் பறிக்கும் கொள்கை இது. இந்தக் கொள்கை மாநில உரிமைகளையும் பறிக்கும். இது பெரியார் பிறந்த மண். சமூக நீதிக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர விட மாட்டோம். இந்த வரைவு அறிக்கையில் இடஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை. பழைய குலக்கல்வி முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஆபத்து” என்று அவர் தெரிவித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பழைய குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கல்விக்கொள்கையை கொண்டுவர சாத்தியம் இல்லை. சமூக நீதிக்கு சவால் விடும் வகையில் எப்படியாவது புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதி, தமிழ்மொழி, மதச்சார்பின்மை இம்மூன்றையும் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். எந்த காலத்திலும் தமிழ்மொழிக்குப் பின்னடைவு ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை நடைமுறைக்கு வந்தால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை பறிக்கப்படும். இனிமேல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே இலவசக் கல்வி வழங்கப்படும். பழைய குருகுல வேதக்கல்வி முறை கொண்டு வரப்படும். இதனால், தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்கிருதம் முன்னிலை பெறும்.
மாணவர்கள் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மேற்படிப்புக்குச் செல்ல முடியும். ஆசிரியர் நியமன விதிமுறைகளை மத்திய அரசு முடிவு செய்யும். 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி இனிமேல் இருக்காது. இவை போன்ற பல விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும். இதற்கெல்லாம் இடம்கொடுக்காமல் இந்த விஷயத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அதன் மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இனியும் கால தாமதமானால் திமுக-வே தனித்தீர்மானம் கொண்டுவரும்” என்று பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு என்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கல்விக் கொள்கையை ஒரு கருவியாக மோடி அரசு கையிலெடுத்திருப்பது பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடியதாக அமைந்துவிடும்.
மேலும், அது இருபாலர் கல்விக்கூடங்களை ஒழித்துக்கட்டி பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்கிறது. சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்காத மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்வதைத் தடுத்து நடுவர்மன்றத்தில் முறையிடும் புதிய போக்கினை வலியுறுத்துகிறது. மொத்தத்தில், கல்வியை காவிமயமாக்குவதுடன் மொழிவழிக் கல்வி முறையை ஒழித்துக்கட்டுவது, அனைத்து மொழிகளையும் அழித்து சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக காலப்போக்கில் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமே புதிய கல்விக் கொள்கையாகும். ஆகவே, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும், கல்விக் கொள்கையில் 1976இல் பறிபோன மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் தமிழக அரசு கொண்டுவரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.