எல்.எல்.பி., சேர்க்கை விண்ணப்பங்களை இன்று (12ம் தேதி)க்குள் சென்டாக் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கான 60 எல்.எல்.பி.,
இடங்கள் உள்ளன. இதில், 51 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டப்படிப்பு முடித்த புதுச்சேரி மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், சென்டாக் இணையதளத்தில் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி முதல் வினியோகிக்கப் பட்டது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப்ப பதிவு பெறப்பட்டது. 400 பட்டதாரிகள் ஆன்-லைனில் பதிவு செய்தனர்.
இவர்களில், நேற்று வரை 140 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்டாக் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தபால் அல்லது கூரியர் மூலமாக, தி கன்வீனர், சென்டாக் அலுவலகம், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, புதுச்சேரி -14 என்ற முகவரிக்கு, இன்று 12ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என, சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.