பிரபல கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டார் !

மோசடி வழக்கில் விடியவிடிய விசாரணை செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும அதிபர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வேந்தர் மூவீஸ் மதன், பண மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும அதிபர் பச்சமுத்துவிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின்
இறுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நிர்வாகியாக இருந்த மதன், கடந்த மே மாதம் ‘காசியில் சமாதி அடையப் போகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார். இந்நிலையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக்கூறி பல மாணவர்களிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதுவரை 112 மாணவர்களிடம் ரூ.72 கோடிக்கும் மேல் பணம் வாங்கி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

எனவே, அந்த வழக்குகள் குறித்து விசாரிக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே, வழக்கை வேறு புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். அந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பாரிவேந்தரை ஏன் விசாரிக்கவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் ஆஜரான அரசு வக்கீல், இந்த வழக்கில் பாரிவேந்தரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குப் பதில் அளித்தார். இந்நிலையில் சினிமா பைனான்சியர் போத்ரா நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பச்சமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பண மோசடி வழக்கில் மதன் வெறும் அம்புதான், பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால், அனைத்து உண்மைகளும் வெளிவரும்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்தநிலையில், பச்சமுத்து நேற்று மாலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜரானார் பச்சமுத்து. அங்கு அவரை தனி அறையில் வைத்து கூடுதல் துணைக் கமிஷனர், மூன்று உதவி கமிஷனர்கள் மற்றும் ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. 14 மணி நேரத்தைத் தாண்டி தொடர்ந்து நடந்தது. விசாரணையில் காவல்துறையினர் பச்சமுத்துவிடம் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை மாணவர்களின் ரூ.72 கோடி பணம் குறித்தும், மதன் எங்குள்ளார் என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை .

இந்நிலையில் விசாரணையின் முடிவில் இன்று மதியம் 420, 406 மற்றும் 34 கீழ் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். பச்சமுத்துவின் ஆதரவாளர்கள் எழும்பூரில் குவிந்ததால், அங்கே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...