நீங்களே உங்களை நேசிப்பது எப்படி?
நாம் நமது அன்பை மற்றவர்களுக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் கொடுப்பதில் சிறந்தவர்கள்.உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்களுக்கான நேரத்தை ஒதுக்குகிறீர்களா? உங்களை நீங்களே நேசிப்பதற்கான பாதைகளை பற்றி அறிய சில நிமிடங்கள் உங்களை அழைக்கின்றேன்..
உங்களை நீங்களே நேசிப்பதற்கான சில படிகள்
விமர்சனங்களை நிறுத்துங்கள்
விமர்சனங்கள் எதையும் மாற்றாது ,,எதற்கும் தீர்வாகாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை ஒத்துக்கொள்ளுங்கள்..உங்களை நீங்கள் விமர்சிக்கும் பொழுது உங்களது மாற்றம் எதிர்மறையானது. அவற்றை நீங்கள் ஏற்றுகொள்ளும்போழுது உங்களுடைய மாற்றம் நேர்மறையானதாக இருக்கும்.
உங்களை நீங்களே மன்னியுங்கள்.
கடந்த காலம் போகட்டும்..அந்த கால கட்டத்தில் உங்களின் புரிதல், விழிப்புணர்வு மற்றும் அறிவுக்கு தகுந்தாற்போல் செய்தீர்கள். இப்பொழுது நீங்கள் வளர்ந்து கொண்டு மாறிக்கொண்டு இருப்பதால் உங்கள் வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கும்.
உங்களை கண்டு நீங்களே பயப்படாதீர்கள்..
உங்களுடைய சில எண்ணங்களால் பயப்படுவதை நீங்கள் நிறுத்துங்கள். இதுதான் வாழ்வில் பயங்கரமான பாதை.. எது உங்களுக்கு மகிழ்வை கொடுக்குமோ அதை நினைத்துப்பார்த்து பயப்படக்கூடிய சிந்தனையிலிருந்து உடனே மாற்றுங்கள்..
உங்கள் மீது கண்ணியமாகவும், கருணையுடனும் அமைதியுடனும் இருங்கள்.
உங்களிடம் நீங்கள் கண்ணியமாக இருங்கள் . கருணையுடன் இருங்கள். .புதிய வழிகளில் உங்கள் எண்ணங்கள் போய்கொண்டு இருப்பதால் அமைதியாக இருங்கள். .நீங்கள் யாரை மனபூர்வமாக நேசிப்பீர்களோ அவர்களைப்போன்று நீங்களே உங்களை நேசியுங்கள்.
உங்கள் மனதிற்கு இரக்கமுள்ளவராக இருங்கள்
சுய வெறுப்பு என்பது உங்களுடைய சிந்தனையை நீங்களே வெறுப்பதாகும்.அந்த சிந்தனை இருப்பதால் உங்களை னங்கள் வெறுக்காதீர்கள்.மெதுவாக அவற்றை மாற்றுங்கள்.
உங்களை நீங்களே பாராட்டுங்கள்.
விமர்சனம் உங்கள் ஆன்மாவை சுக்குநூறாக உடைத்தெறியும்..ஆனால் பாராட்டுதல்கள் ஆன்மாவை கட்டுமானம் செய்யும். எந்த அளவுக்கு உங்களை பாராட்ட முடியுமோ அந்த அளவுக்கு பாராட்டுங்கள். எந்த அளவுக்கு ஒவ்வொரு விசயத்தையும் நேர்த்தியாக செய்கிறாய் என்று பார்த்து நீங்களே பாராட்டுங்கள்.
உங்களுக்கு நீங்களே உறுதுணையாக இருங்கள்.
உங்களுக்கு உதவி செய்ய வழிகளை கண்டுபிடியுங்கள்..நண்பர்களை அணுகுங்கள். அவர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுமதியுங்கள்.
எதிர்மறையுடனும் அன்புடன் இருங்கள்.
ஏதோ ஒரு விசயத்தை செய்ய அந்த எதிர்மறையான செயலை பயன்படுத்தியதை ஏற்றுகொள்ளுங்கள்.அதே விசயங்கள் செய்வதற்கு நேர்மறையான புதிய வழிகள் உங்களுக்கு தெரிவதால் , மிகவும் அன்புடன் பழைய எதிர்மறைகளை கைவிடுங்கள்..
மேலும் கீழ்காணும் சுயபிரகடனங்களை எடுங்கள்..
• நான் என்னுடைய அன்பிற்கு மதிப்பானவள்.
• நான் மரியாதைக்கும் நான் தகுதியும் மதிப்பும் வாய்ந்தவள்
• நான் என்னை மதிக்கிறேன் நான் மற்றவர்களுடன் சமமானவள்
• என்னுடைய கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் மதிப்பு வாய்ந்தவை.
• எது என்னுடைய சிறந்த விருப்பம் என்று எனக்கு உணர்வுபூர்வமாக தெரியும்.
• நான் என்னை அங்கீகரிக்க தேர்ந்தெடுத்துள்ளேன். ஆகவே யாருடைய அங்கீகாரமும் பார்க்க தேவையில்லை.
• நான் என்னை நிபந்தனையற்று நேசிக்க முடியும் என்று ஒத்துகொள்கிறேன்.
• நான் என்னைப்பற்றிய அனைத்து எதிர்மறை சிந்தனைகளையும் வெளியேற்றுகிறேன்.
• யாராவது என்னை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே எதாவது செய்யவேண்டும் என்ற என் கருத்தை வெளியேற்றுகிறேன்..
இல.முரளி பொள்ளாச்சி