கற்றலில் குறைபாடு: விழிப்புணர்வு நிகழ்ச்சி !!

கற்றலில் குறைபாடு என்பது ஒரு நோயோ, குறைபாடோ அல்ல; அது ஒரு குழந்தையின் திறமை அறிந்து கற்றல் திறனை ஊக்குவிக்காததால் ஏற்படும் பின்னடைவு. முறையான பயிற்சியும், வழிகாட்டலும் இருந்தால் ஒவ்வொரு குழந்தையும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் என்பது டிஸ்லெக்ஸியா ஆய்வாளர்கள் சொல்லும் விளக்கம்.


‘அனைத்து பெற்றோர்களும், தங்களின் பிள்ளைகள் படிப்பில் மட்டுமே சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், குழந்தைகளின் திறன் அறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கற்றலில் குறைபாடு இருந்தாலும் குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை போன்ற துறைகளில் சாதனை படைக்க ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதன் முதல் நாளில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கற்றல் திறனில் குறைபாடுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை தென் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆஷா மெரீனா தொடங்கி வைத்தார். எம்.டி.ஏ ஒருங்கிணைப்பாளர் வான்கடே ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகர் பேசும்போது, “கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் வாசித்தல், எழுதுதல், கணிதம் போன்றவற்றில் பின்தங்கி இருந்தாலும் பிற துறைகளில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்களாக உள்ளனர். இந்தக் குழந்தைகளால் ஓவியம், இசை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைக்க முடியும். அதனால், அவர்களை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டு செயல்பாடுகளிலும் உளவியல் திறனிலும் இந்தக் குழந்தைகள் அபார ஆற்றலை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார். மேலும், “குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி அவர்கள் விரும்பும் துறைகளில் சாதனை படைக்க உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமையே” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...