உள்ளாட்சி தேர்தல் எதிரொலி 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு காலஅட்டவணை வெளியிடுவதில் தாமதம்!!!

மும்பை, மராட்டியத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களால் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வெளியிடுவதில் தாமதம்

மராட்டியத்தில் ஆண்டு தோறும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநில கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம்
தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். எனவே மாணவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் பொதுத்தேர்வு கால அட்டவணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை.தேர்தல் காரணம்

இந்த தாமதத்திற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வரும் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலே காரணம் என கூறப்படுகிறது. அதாவது முன்கூட்டியே கால அட்டவணையை வெளியிட்டால் தேர்தலுக்கு ஏற்ப அதில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.இதுகுறித்து மாநிலகல்வி வாரிய செயலாளர் கிருஷ்ணகுமார் பாட்டீல் கூறும்போது ‘ வரும் டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் சில தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காத வரை எங்களால் பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட இயலாது‘ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...