இதுவரை 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 79 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதால், இஸ்ரோ வருவாய் ஈட்டத் தொடங்கியிருக்கிறது. இதுவரை வணிக ரீதியில் 21 நாடுகளைச் சேர்ந்த 79 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதனால், 2015-ஆம் ஆண்டில் ரூ.1,717 கோடி வருவாயையும், நிகழாண்டில் ரூ. 1,790 கோடி வருவாயையும் இஸ்ரோ ஈட்டியிருக்கிறது.
செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக, அல்ஜீரியா உள்ளிட்ட சில நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கு இரண்டு ஜி.எஸ்.எல்.வி. மாக்-2 ராக்கெட்டுகளைச் செலுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 8-இல் ஒரு ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் மற்றொரு ஜி.எல்.எல்.வி. ஏவப்படும்.
ஒரு வாரத்துக்குப் பிறகே தகவல்: விண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் கே.யு.பேண்ட் செயல்பாட்டுக்கு வர ஒரு வார காலமாகும்.
அடுத்தது என்ன? அடுத்ததாக தகவல்தொடர்புக்கான ஜிசாட்-18 செயற்கைக்கோளானது அமெரிக்காவில் உள்ள ஃபிரெஞ்ச் கயானா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அக்டோபர் 4-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஜூலை 4-இல் அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாகத் தாமதமாக அனுப்பப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி36 ராக்கெட் மூலம் நவம்பரில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மாக்3 ராக்கெட் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது ஏவுதளம்? தமிழகத்தில் மூன்றாவது விண்வெளி ஏவுதளம் அமைக்க வேண்டிய தேவை இப்போதைக்கு ஏற்படவில்லை.
மங்கள்யான்: செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24-ஆம் தேதியோடு தனது 2 ஆண்டு திட்டக் காலத்தை முடித்துவிட்டது. இருந்தபோதும், அதிலிருந்து தொடர்ந்து தகவல்கள் பூமிக்கு கிடைத்து வருகின்றன.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக விண்வெளியில் கிரகணத்தால் விண்கலனின் பேட்டரிகள் பாதிக்காத வகையில் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மங்கள்யான்-2 தாமதம் ஏன்? இஸ்ரோ அடுத்தடுத்து வேறு சில செயற்கைக்கோள் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. மங்கள்யான்-2 திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஆலோனைகள் மேற்கொள்ளப்பட்டு திட்டம் வகுக்கப்படும்.
செயற்கைக்கோள் தயாரிக்கத் திட்டம்: அடுத்தகட்ட திட்டமாக வணிக ரீதியில் வெளிநாடுகளுக்கு செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்துவதற்கான முயற்சி இஸ்ரோ எடுத்து வருகிறது என்றார்.