காலியாக உள்ள 22 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப இறுதிகட்ட சென்டாக் கலந்தாய்வு இன்று !!

புதுச்சேரிபுதுவையில் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 22 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்புவதற்கான இறுதிகட்ட சென்டாக் கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.இறுதிகட்ட கலந்தாய்வு



புதுவை அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் உயிரியல் சார்ந்த படிப்புகளில் அரசுக்கான இடஒதுக்கீடு சென்டாக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் 25–ந் தேதி தொடங்கி 29–ந் தேதி வரை நடந்தது. 2–வது கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 25–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில் காலியாக உள்ள மற்ற இடங்களை நிரப்ப இறுதிகட்ட கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.காலை 9 மணிக்கு 200 முதல் 184 வரை கட்–ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 184.333 கட்–ஆப் மதிப்பெண்கள் முதல் 139.666 வரை கட்–ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.22 எம்.பி.பி.எஸ். இடங்கள்

தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 14 இடங்களும், மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களும், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களும், ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களும், ஸ்ரீலட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரியில் 2 இடங்களும் என மொத்தம் 22 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் காலியிடங்கள் எதுவும் இல்லை.இதேபோல் ராஜீவ்காந்தி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில் 2 இடங்களும், மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் 2 இடங்களும் காலியாக உள்ளன. சுயநிதி கல்லூரிகளான இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும், மாகி பல் மருத்துவக் கல்லூரியில் 19 இடங்களும், வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் 48 இடங்களும் காலியாக உள்ளன. ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரியில் 1 இடமும் காலியாக உள்ளன.அழைப்புக் கடிதம்

‘சென்டாக்’ கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் அழைப்பு கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in–ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் ரூ.300–க்கான டி.டி.யையும், இதர பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.750–க்கான டி.டி.யையும், The Convenor, CENTAC என்ற முகவரிக்கு எடுத்து புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை சென்டாக் சேர்மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...