தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின சுயநிதி பள்ளிகள் 82 சதவீதம் நடந்தன!!!

சென்னை,தமிழ்நாட்டில் நேற்று முழு அடைப்பு நடந்தபோதிலும் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கின. 82 சதவீத சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டன.அரசு பள்ளிகள் இயங்கினகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் விவசாய சங்கங்கள்,

வணிகர்கள் சங்கங்கள் ஆகியவை நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின.தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 201 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. 8 ஆயிரத்து 404 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் நேற்று வழக்கம்போல் இயங்கின. தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 980 நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் 82 சதவீத பள்ளிகள் நடைபெற்றன.சுயநிதி பள்ளிகள்487 சுயநிதி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 445 பள்ளிகள் திறந்து இருந்தன. நேற்று அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வேன், ஆட்டோக்கள் ஓடாததால் அவைகளில் வரக்கூடிய மாணவர்களை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அழைத்துவந்தனர்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கம்போல பள்ளிகள் இயங்கின. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...