பிஎப் பணம் எடுக்க மொபைல் ஆப் வருகிறது

பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் இ-கேஒய்சி முறையில் ஆதார்
எண்ணை அடிப்படையாக வைத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். தற்போதைய முறையில் பிஎப் பணம் எடுக்க அல்லது பென்ஷனுக்கு விண்ணப்பித்தல் என அனைத்தும் அதற்கான படிவத்தை நிரப்பி நேரில் சென்று வழங்க வேண்டும். இதற்கு மாற்றாக, மொபைல் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை பிஎப் நிறுவனம் வழங்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...