பள்ளிப்புத்தகங்களில் வைத்து கோகைன் கடத்தல்!

சென்னை பல்லாவரத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பயணி தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் 3.5 கிலோ மதிப்பிலான கோகைன் போதை பொருள் தடுப்பு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.



பிரேசில் நாட்டைச் சேர்ந்த டாஸ்சில்லா ஜெயில்சன், பல்லாவரத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். இவர் பிரேசிலின் ‌ரியோ டி ஜெனிரோவிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இவரிடம் போதை பொருள் இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி போலீஸார் ஜெயில்சனிடம் விசாரணை நடத்தினர். அவர், பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களுக்குகிடையே கோகைன் போதை பொருளை மறைத்துக் கொண்டு வந்துள்ளது தெரியவந்தது.

பிரேசிலிருந்து நேரடியாக சென்னைக்கு கோகைன் கடத்தியது இதுவே முதன்முறையாகும் என்று போலீஸார் கூறியுள்ளனர். கடத்தி கொண்டு வரப்பட்ட கோகைன் போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில், ரூபாய் 10 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய தென் ஆப்பிக்கா பெண் மோல்பீ கே.லிஸி என்பவரிடம் போலீஸார் சோதனை நடத்தினர். அவரிடம், 990 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரிடம் இருந்த கோகைனை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூபாய் ஐந்து கோடி. பிரேசில் நகரான சா போலாவிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்துள்ள இவர், சுற்றுலா விசாவில் வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் போதையகமாக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது இக்கடத்தல் சம்பவங்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...