காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வழங்க
உத்தரவிட்டுள்ளதுடன், நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா தண்ணீர் வழங்க மறுத்து வருவதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி தொடர்பான ஆலோசனை கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.
இந்நிலையில், டில்லியில் பேசிய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் அதற்கான பணிகள் துவங்கி விட்டன. நான்கு வாரத்திற்குள் வாரியம் அமைக்கப்படும் எனக்கூறினார்.
இந்நிலையில் டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. வேறு தேவைக்கு தண்ணீர் தர முடியாது.சட்டசபை தீர்மானத்தின்படியே அரசின் நடவடிக்கை இரு்கும் எனக்கூறினார்.