கோயில் பணியாளர் ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்

கூறியிருப்பதாவது: “இந்து சமய அறநிலையங்கள் துறையின் மூலம் பின்வரும் திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டம், பெண்ணாடம், பிரளய காலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் அய்யப்பன் திருக்கோயில், கோவை மாவட்டம், உக்கடம், லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், பூவராகவசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மேட்டுத் திடல், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆஸ்ரமத்துக்கு 3,634 சதுர அடி பரப்பளவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதற்கும், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய அறிவியல் ஆய்வகக் கட்டடம், ஆறு வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படுவதற்கும், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் மேம்பாட்டு மேற்கொள்வதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்குத் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூபாய் 1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, திருக்கோயில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தற்போது வழங்கப்பட்டு வரும் துறை நிலையிலான மாத ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 3,700 ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதற்கான ஆண்டு கூடுதல் செலவினம் ரூபாய் 4 கோடியே 44 லட்சம் ஆகும்”. இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...