உள்ளாட்சி தேர்தலில், யார் யாரெல்லாம் போட்டியிட முடியாது ?

உள்ளாட்சி தேர்தலில், யார் யாரெல்லாம் போட்டியிட முடியாது என, தமிழக தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள்:
● உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த அலுவலராகவோ, பணியாளராகவோ, அரசு நிறுவனம் சார்ந்த ஊழியராகவோ இருக்கக் கூடாது. குறிப்பாக, மத்திய, மாநில அரசு பணியாளராக இருக்கக் கூடாது

● மத்திய, மாநில அரசில் பணியாற்றி, லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் போட்டியிட தகுதியற்றவர். குடியுரிமை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராகவும் இருக்கக் கூடாது
● வேட்பு மனு தாக்கல் கடைசி நாளன்று, வேட்பாளர் கிரிமினல் வழக்கில், குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டால், தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை. தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தண்டனை முடிந்து, விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து, மேலும், ஆறு ஆண்டுகள் தொடர்ந்து, தகுதியற்றவர் ஆவார்
● குற்ற செயல்கள் தவிர, வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் குறையாத சிறை தண்டனை பெற்றாலும், தீர்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து, மேலும் ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாது
● பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில், அவ்வகுப்பைச் சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்பின், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாது
● இது தவிர, மனநலம் குன்றியவர், வாங்கிய கடனை தீர்க்க வக்கற்றவர் என, மனு தாக்கல் செய்திருந்தாலும், அதற்கான நீதிமன்றத்தில், அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், போட்டியிட தகுதியில்லை
● எந்த ஒரு ஊராட்சிக்கும் வேலை மற்றும் பொருள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. ஊராட்சியில் சம்பளம் பெறும் மற்றும் எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுனராகவோ இருக்கக் கூடாது
● முந்தைய ஆண்டு வரை, ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை, நிலுவை வைத்திருக்கக் கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது
● உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு செலவின கணக்குகள் தாக்கல் செய்யாமல், தேர்தல் ஆணையத்தால், மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அன்றைய நாளில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது
● இந்த விதிமுறைகளுக்கு மாறாக போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் பற்றி தெரிய வந்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...