உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகுமா? : மாநில தேர்தல் கமிஷன் திடீர் யோசனை!!!

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடும் யோசனையில், மாநில தேர்தல் கமிஷன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம், 1.50 லட்சத்திற்கும் மேற் பட்ட பதவிகள் உள்ளன; இதில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம், 24ம் தேதியுடன் முடிகிறது;
அதற்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் தேதி, எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, சில நாட்களாக இருந்து வருகிறது. ஆனால், பெண்கள் மற்றும் எஸ்.சி., - -எஸ்.டி., பிரிவினருக்கான, உள்ளாட்சி பதவிகளை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இப்பணிகளை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து மேற் கொண்டு வருகின்றன. பதவி பிரிப்பு குறித்த விபரங்கள், இன்னும் அரசிதழில் வெளியிடப்பட வில்லை.

மேலும், நகர்ப்புற வேட்பாளர் கையேட்டையும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. இவை வெளியான பிறகே, தேர்தல் தேதியை அறிவிக்க முடியும். எனவே, தேர்தல் தேதியை தள்ளிப் போடலாமா என்ற யோசனை, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து, கட்சிகள் சார்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தலை, அக்., 24க்குள் நடத்தி முடிப்பதாக, மாநில தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மாவட்ட வாரியாக, உள்ளாட்சி பதவிகள் இட ஒதுக்கீடு பட்டியலை வெளி யிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை, ஐகோர்ட்டில் தெரிவித்து, தேர்தலை தள்ளிப் போடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது; எனினும், ஓரிரு நாளில் உறுதியான முடிவு எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...