உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் திரும்ப பெற வேண்டும்; மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!!
சென்னை,உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் திரும்ப பெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வறட்சி, வெள்ள நிவாரண கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:–நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகள்) அலுவல்சாரா உறுப்பினர்கள் கூட்டம், அந்தந்த அமைப்புகளின் மூத்த அலுவலர்கள் தலைமையில் தான் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.இந்த கூட்டங்களில் வறட்சி, வெள்ள நிவாரணம் மற்றும் இதுபோன்ற மிக அவசரமான தேவைகள் குறித்து மட்டும் விவாதிக்கலாம். ஆனால் கூட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகைகளுக்கு செய்தி வழங்குவதோ, புதிய திட்டங்கள் மற்றும் நிதி வழங்குவது தொடர்பாகவோ இந்த கூட்டங்களில் விவாதிக்க கூடாது.எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மூடல்
மனு நீதிநாள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவைகள் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. அரசு நிதியில் இருந்து கட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது. எனவே மேற்கண்ட கட்டிடங்களை பூட்டி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.மேலும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த கட்டிடங்களும், அறைகளும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட எந்தவொரு அரசியல் கட்சியினராலும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.அரசு வாகனங்கள்
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு (மேயர், நகராட்சி, பேரூராட்சி உள்பட தலைவர்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வாகனங்களை அவர்களிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.