சிம்லாவில் தாரா ஹால் ஊரில் லொரேடோ கான்வென்ட் உள்ளது. இந்த கான்வென்ட்டின் புதிய கட்டட நிதிக்காக மாணவர்கள் ஸ்நாக்ஸ் விற்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெள்ளிக்கிழமையன்று திடீரென லொரேடோ கான்வென்ட்
பள்ளியில் ஆய்வை மேற்கொண்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் செய்யப்படும் ஸ்நாக்ஸ்களைப் பள்ளிக்கு கொண்டு வந்து சக மாணவர்களிடம் விற்கின்றனர். ஸ்நாக்ஸ் விற்ற பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் கொடுக்கின்றனர். கட்டட நிதி என்ற பெயரில் பள்ளி நிர்வாகம் இப்படி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இமாச்சல பிரதேச குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கிரண் தண்டா இதுகுறித்து கூறும்போது, “மாதத்துக்கு ஒருமுறை உணவு கண்காட்சிக்காக, மாணவர்கள் தங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் தயாரித்து அதை பள்ளியில் விற்பார்கள். உணவு கண்காட்சி மூலம் வரும் பணத்தை பள்ளி கட்டடத்துக்காக ஒதுக்கி வருகிறோம் என அந்த பள்ளியில் முதல்வர் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதே பதிலைத்தான் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் கூறியுள்ளனர்.
குழந்தைகள் உரிமை ஆணையம் இதுபோன்ற செயல்களை கண்டிக்கிறது. மேலும், இது போன்று மாணவர்களிடம் நிதி வசூலிக்கக்கூடாது என மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் ஆய்வுக்குப் பின் இளம்சிறார் நீதி உறுப்பினர் அசுதோஷ் குப்தா, கல்வி உறுப்பினர் ரோஷன் லால் மற்றும் குழந்தை தொழிலாளர் உறுப்பினர் குசும் வர்மா ஆகியோர் உட்பட மனித உரிமை ஆர்வலர் தண்டா தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து அவர், “ஆறாம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களிடமும் விசாரித்தப்போது, இதுபோல் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது ஒரு சுமை. அது மட்டுமல்லாமல், இதற்கு பயந்து சில குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை” என்று கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் பள்ளி மாணவர்களிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகவோ எந்த நிதியும் வசூலிக்கக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.