உள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியம் எவ்வளவு ?

உள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

3 நாட்கள் பயிற்சிக்குரிய மதிப்பூதியம்
+
தேர்தலுக்கு முந்தைய நாள் பணியிடத்திற்குச் செல்லுதல்.
+
தேர்தல் நாள்
+

எல்லா நாட்களுக்குமான போக்குவரத்துப் படி, உணவுப்படி எல்லாம் சேர்த்துதான் இந்தக் கட்டணம் நிர்ணயித்துள்ளது அரசு..

PRO  : 2050.00
P.O 1 : 1550.00
P.O 2.:    600.00
P.O 3 :  1550.00
P.O 4 :  1550.00
P.O 5 :  1550.00

P.O 2 மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் ஏன் கிள்ளிக் கொடுக்கின்றார்கள்?

P.O 2 அலுவலர்கள் மற்ற அலுவலர்களைப் போலத்தானே வேலை செய்கிறார்கள்? இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத்தான் மற்றவர்களைவிட வாக்குச்சாவடியில் பணிச்சுமை அதிகம்.

ஆட்காட்டி விரலில் மை வைப்பது..

வாக்காளர்களிடம் கையொப்பம் பெறுவது..

ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பதற்கான சிலிப் வழங்குவது..

என்று மூன்று பணிகளையும் P.O 2 அலுவலர்தான் செய்தாக வேண்டும்..

மற்ற அலுவலர்களுக்கெல்லாம் குறைவான வேலையே..

ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் மிகக் குறைவான மதிப்பூதியம்?

இது இயற்கைச் சமநீதிக்கு (Natural justice) எதிரானது.

தேர்தல் ஆணையம் இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்..

இல்லையென்றால் P.O 2 பணியை ஏற்பது குறித்து ஆசிரியர் சமூகம் சிந்திக்க வேண்டும்..

(குறிப்பு: இது ஆசிரியர்களுக்கான பதிவு.. இதில் வேறு எவராவது வந்து ஆசிரியர்களுக்கு கொள்ளையற்ற ஊதியம்.. இது போதாதா.. என்று கேலி செய்யாதிருங்கள்..

ஆசிரியர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.. அவர்களை மிதிக்காதிருங்கள்..

அவ்வாறு கேலி செய்கிறவர்கள் தாராளமாக அவர்களே முன் வந்து தேர்தல் பணியை ஏற்றுக் கொள்வதில் ஆசிரியர்கள் யாருக்கும் ஆட்சேபணை எதுவும் இருக்காது..)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...