எண்ணங்கள் என்பது சுவற்றில் எறியப்படும் ரப்பர் பந்து போன்றது! நம் மனதில் நாம் எதை எறிகிறோமோ அது தான் நம்மிடம் திரும்பி வரும்!
உதாரணமாக, ‘நம்மால் முடியும்’ என்ற ஒரு பொறி மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தால், அது உற்சாகமாக, உத்வேகமாக நம்மை செயல்பட வைத்து வெற்றியை தந்து விடும். அதுவே, ‘நம்மால் முடியாது’ என்ற ஒரு சிறு துளி விஷ சிந்தனை, அடியோடு நம் எண்ணங்களை மாற்றி நம்மை செயல்படாமல் தடுத்துவிடும்.
மூளையின் பலம்
ஒரு எண்ணத்தை பற்றியே நாம் சதா காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அது நம் மூளையில் குவிக்கப்பட்டு பின் பதிவாகி, அதுவே நமக்கு ஆக்கப்பூர்வ முறையில் வெற்றிகளை தேடித் தரும் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.
எண்ணங்கள் சிதறக் கூடியவை. அது மாறாமல் நேர்க்கோட்டில் செலுத்தவேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது! எண்ணங்களே நமது முயற்சிக்கான முதல் மூலதனம். அவற்றை முறையாக முதலீடு செய்வதே, நாம் செய்யவேண்டிய முக்கியமான செயல்!
ஒருமுகப்படுத்துங்கள்
எண்ணங்களுக்கு காந்த சக்தி உண்டு. நமது எண்ணங்கள், நம்மை சுற்றி இருப்பவர்களையும் ஈர்க்கும். அது நேர்மறை எண்ணமாக இருந்தாலும் சரி, எதிர்மறை எண்ணமாக இருந்தாலும் சரி! இதை அனுபவத்தால் நாம் நிச்சயம் உணர்ந்திருப்போம். எப்படியென்றால், சிலருடன் இருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாகவும், சக்தி மிகுந்தவர்களாகவும் உணர்ந்திருப்போம்!
நாம் நம்மை எதிர்பாரமலேயே, எண்ணங்கள், நம்மிடம் உலாவ ஊக்கமளிக்கிறோம். அதேசமயம், பிறரது எதிர்மறை எண்ணங்கள் நம்மை தூண்டிவிடாதபடி, நம்மை தற்காத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு விருப்பமில்லாதவற்றை நாம் எப்படி நினைத்துப் பார்க்காமல், மறக்க முயற்சி செய்கிறோமோ, அதுபோல எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்ட விடாமல் தடுப்போம்.
என்றும் நேர்மறை எண்ணங்களுக்கே ஊக்கமளிப்போம்; அதற்கு நமது எண்ணங்களை நாம் முதலில் எண்ணிப் பார்ப்போம்!
-எம். விக்னேஷ், மதுரை