இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலமாக, அரசின் சேவைகள்
வழங்கப்படுகின்றன. அவற்றுடன், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அவர்கள், தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவற்றை, இ - சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். இந்த சேவையை பெற, குறைந்த அளவிலான சேவை கட்டணம் உண்டு. தற்போது, 12 மாநகராட்சி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட, 51 நகராட்சிகளில், ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன; அதனால், அங்கு வசிப்போர் மட்டும், இவ்வசதியை பெறலாம். மற்ற நகராட்சிகளில், ஆவணப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...