சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது குறித்த வரைவு விதிகளை மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் (சிபிஇசி) திங்கள்கிழமை வெளியிட்டது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்ற ஒரு சில தினங்களிலேயே இந்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பல விரைவான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
ஜிஎஸ்டி சட்ட வரம்புக்குட்பட்ட உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், தாங்கள் விண்ணப்பம் சமர்ப்பித்த மூன்று நாள்களுக்குள் இணையதளம் மூலமாக தங்களின் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் ( பான் எண்), செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். தாங்கள் தொழில் நடவடிக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பாவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருந்தால், குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு பெற்றதாகவே கருதப்படும் என அந்த வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.