தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை கடந்த 25-ம் தேதி மாலை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம். அதன் படி ல் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.அதற்கான தேர்தல் அறிவிப்பை அவசர அவசரமாக வெளியிட்டது ஆணையம்.உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பான குளறுபடிகளையும் அவசரகதியான தேர்தல் அறிவிப்பையும் எதிர்த்து திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்
“அரசியலமைப்பு சட்டத்தின் படி
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிகையில் மூன்றில் ஒரு பங்கு எஸ்.டி மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப் பட வேண்டும்.ஆனால் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் சுழற்சி அடிப்படையில் எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப் பட வேண்டிய இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் எஸ்.டி பிரிவினர் மற்றும் அந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை.இதனால் எந்த விதமான உள்ளாட்சிப் பதவிகளுக்கும் எஸ்,டி.பிரிவினரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் எஸ்.டி.பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்பட வில்லை. எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கும் எதிரான இந்த மாநகராட்சியின் அறிவிப்பானையையும் , தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்.எஸ்.டி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , மனுதாரர் வக்கீல் ," தேர்தல் அறிவிப்பை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அறிவித்து மறுநாளே வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்வதில் இருந்தே தமிழக அரசுக்கு இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான அறிவிப்பானைகளில் சென்னையை தவிர மற்ற எதுவும் இணையதளத்தில் வெளியிடப்பட வில்லை.அது போல் தமிழகம் முழுவதிலுமே எஸ்.டி பிரிவினருக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கப்பட வில்லை" என்று குற்றம் சாட்டினர்.