கடைகளில், பொருட்கள் இருப்பு, விற்பனை நிலவரம் 'ஆன் - லைன்' முறைக்கு மாறிவிட்டது; விற்பனையிலும் 'டிவைஸ் சிஸ்டம்' புகுத்தப்பட்டு ஒட்டுமொத்த துறையும் நவீனமானாலும், கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின்
எடையளவு குறைபாடு தொடர்வதால், ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில், ரேஷன்கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்னும், கருவி வழங்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, ரேஷன் கடைகளுக்கான ஒதுக்கீடு விபரம் அனுப்பப்படுகிறது.
அவ்விபரங்கள் ரேஷன் கடை கருவியில் 'அப்டேட்' ஆகிறது.கடைக்கு பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதும், கருவியில் இருப்பு நிலவரம் 'அப்டேட்' ஆகிறது. ஒவ்வொரு கார்டுக்கும் பில் போடும் போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன்கார்டுதாரரின் மொபைல்போன் எண்ணுக்கு,எஸ்.எம்.எஸ்., செல்லும் வகையில் திட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், பொருள் இருப்பு, விற்பனை குறித்த விபரங்களும் உடனுக்குடன் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
பொதுவினியோக திட்ட முறை நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட்கள் எடையளவு குறைவாக இருப்பது, பெரும் பிரச்னையை
ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையிலும், பொருட்கள் எடையளவு குறைவாக சப்ளை செய்யப்பட்டாலும், ஊழியர்கள் சரிக்கட்டிக்கொண்டிருந்தனர். தற்போது, கடைகளில் இருப்பு குறைபாடு ஏற்படும்போது ஊழியர்களுக்கு அபராதம் மற்றும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்குறைபாட்டுக்கு தீர்வு காணாவிட்டால், ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் திட்டத்தை வரவேற்கிறோம். அதற்கேற்ப, கடைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மோசமான கட்டடம், பெருச்சாளி தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும், கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருக்கும் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அரிசி, சர்க்கரை, கோதுமை, உளுந்து, துவரம் பருப்பு மூட்டைகளில், 50 கிலோவுக்கு, 48 கிலோ மட்டுமே இருக்கிறது. சாக்கு எடை, 650 கிராம் கழிக்கப்படுவதில்லை. மண்ணெண்ணெய் அளவும் ஒதுக்கீட்டை விட குறைவாக வழங்கப்படுகிறது.
இதனால், ஒதுக்கீடுக்கும், கடைகளில் இருப்பு அளவுக்கும் வித்தியாசம் காணப்படுகிறது. கணக்கில் முரண்பாடு காணப்பட்டால், கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாதந்தோறும் இதே பிரச்னை ஏற்பட்டால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில், பல மட்டத்தில் அதிகாரிகள் தவறு செய்வதால், கடைநிலையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, நுகர்பொருள் வாணிபக்கழக கடைகளுக்குவழங்குவதை போன்று, 0.5 சதவீதம் சேதாரக்கழிவு வழங்க வேண்டும், பொருட்கள் எடை பார்த்து ஒப்படைத்து, கடை ஊழியர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அல்லது, பொட்டலமாக சப்ளை செய்ய வேண்டும்.
திட்டம் நவீனமாகியுள்ள நிலையில், கடைகளில் இருக்கும் பிரச்னைகளும், எடையளவு குறை
பாடும் களையப்பட வேண்டும்.
இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.
இன்சூரன்ஸ் செய்யணும்!
ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள, கருவி மீது எண்ணெய் படியக்கூடாது, சேதம் ஏற்படக்கூடாது. கருவி சேதமடைந்தால், ஊழியர்களுக்கு, 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால், கருவிக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், தனியாக பெட்டி வழங்க வேண்டும் என, ரேஷன் கடை பணியாளர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.