CPS ஐ இரத்து செய்ய கோரி 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு இதுவரை பதில் இல்லை , ஒருவர் வழக்கு தொடுத்ததால் CPS இரத்தாகிவிடும் என காமெடி !!!





2012-ல் பதியப்பட்ட வழக்கிற்கு இதுவரை அரசு தரப்பில் பதிலில்லை. அதன் நாளிதழ் செய்திதான் மேலே பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழி இதற்குத் தீர்ப்பு கிடைத்துவிடும் என நீங்கள் நம்பலாம். ஆனால் நிதர்சனம் அதுவல்ல. வலுவான போராட்டங்களே நமக்கான பல உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளது. சிலர் பணம்பார்க்க உங்களை அறியாமலேயே நீங்கள் கருவியாக்கப்பட்டுள்ளீர்கள். இதை நீங்கள் உணரத் தலைப்படாதவரை நமக்குள்ளான ஒற்றுமையை சிலர் பணம்பார்க்க குலைத்துக் கொண்டே இருப்பர்.

CPS பற்றி முனைவர் பட்டமே பெறும் அளவிற்கான இலட்சக்கணக்கான தரவுகளைத் திரட்டிய திண்டுக்கல் எங்கல்ஸ் அவர்களாலேயே நீதி மன்ற செயல்பாட்டிற்குள்ளாக அரசைப் பணிய வைக்க இயலவில்லை. அவர் இன்றும் நம்மிடையே எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட வலுவான போராட்டத்தையே.

டெல்லி இரயில் எண்ணை வழக்குத் தீர்ப்பெண்ணாக அறிவித்துப் பணம் பார்த்த நபரின்  செயல்பாடுகளை நம்பப்போகிறீர்களா?

ஒட்டுமொத்த CPS பங்காளரிடமும் இதன் தீமை பற்றிய தாக்கத்தை ஏற்படுத்த எவ்வித ஆதாயத்தையும் எதிர்பாராது தனது பணத்தையும் உழைப்பையும் தொடர்ந்து செலவிட்டு வரும் எங்கல்ஸ் கூறுவது போல போராட்டக் களத்தை நம்பப் போகிறீர்களா?

முடிவு உங்கள் கையில்.

இறுதியாக ஒன்று நீங்கள் மறுத்தாலும் மறையாத உண்மை. அரசு ஊழியர்கள் சங்கம் ,இரண்டு ஆசிரியர் சங்களின் வலிமையான  வேலைநிறுத்தப் போராட்டமே, முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் CPS குழு பற்றியும், இறந்தோருக்கான பலன் பற்றியும் பேச வைத்தது. இது போராட்டத்தின் முதல் அதிர்விற்கான விளைவே. இறுதி வெற்றி அல்ல.

அடுத்தடுத்த நமது ஒன்றுபட்ட போராட்டமே நமக்கான உரிமையைப் பெற்றுத் தரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...