துருக்கியில் 10,000 அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் !

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 10,131 அரசு ஊழியர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவதாக துருக்கி அரசு அறிவிக்கை வெளியிட்டது.

துருக்கி பாதுகாப்புப் படையினரில் ஒரு பிரிவினர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி ஆட்சியைக் கவிழ்க்கச் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத்
தொடர்ந்து, ஆட்சிக் கவிழ்ப்பில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவத்தினர், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மீது அதிபர் எர்டோகன் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் ஏராளமானோர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்வி, நீதி, சுகாதாரத் துறைளைச் சேர்ந்த மேலும் 10,131 அரசு ஊaழியர்களை சனிக்கிழமை பதவி நீக்கம் செய்ததாக அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது.



ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக துருக்கியில் இதுவரை 35,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அந்நாட்டில் பிரிவினை கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் குர்துகளுக்கு ஆதரவாகச் செயல்படும் 15 ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் முடக்கப்பட்டதாக அரசு சனிக்கிழமை அறிவித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...