நவ.,16ல் துவங்குகிறது பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர் நவ., 16ம் தேதி துவங்கும் என பார்லி., செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.







அதிகாரப்பூர்வ அறிவிப்பு:





நிர்வாகக் காரணங்களுக்காக பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே அதாவது நவ.,16ம் தேதி துவங்குவது என பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று(அக்.,19) வெளியிடப்பட்டது. பார்லி., செயலர் இதனை வெளியிட்டார். ஒரு மாதம் நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரானது டிச., 16ம் தேதி நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





முன்னதாகவே...





யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்', காவிரி விவகாரம், வெளியுறவுக் கொள்கைகள், பாக்., மீதான நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நவம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் துவங்கும் குளிர்கால கூட்டத்தொடர், இம்முறை முன்னதாகவே கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...