இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு சேவைக்கு 15 ஆண்டுகள் வரை தன் உழைப்பை செலுத்த தயாராகிறது.
இந்தியாவின் இஸ்ரோவிற்கு சொந்தமான ஜிசாட் 18 தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து ஏரியன் 5 வி.ஏ. 231 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ முடிவு எடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்படுவதாக கூறப்பட்டது.
வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிக காற்றழுத்தம் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வு 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவை
ஜிசாட் 18 செயற்கை கோள் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ 404 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைகோள் சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க 48 டிரன்ஸ்பாண்டர்களை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் தற்போது ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டு சேவை புரிய உள்ளது.
15 ஆண்டுகள் வரை சேவை
செயற்கைகோள் தனது சுற்றுவட்ட பாதையை அடைந்தவுடன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் வசப்படுத்துகின்றனர். அப்பொழுது முதல் இந்த செயற்கைகோள் தனது சேவையை துவங்குகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.