நம்பர் 1, கல்வி நிறுவனமாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி தேர்வு!!

புதுடில்லியில் உள்ள, சி.பி.சி.ஐ., என்கிற கத்தோலிக் பிஷப்ஸ் கான்பெரன்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் கல்வி மற்றும் கலாசார பிரிவு, இந்த முதல் விருதினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வழங்கியுள்ளது. தேசிய கத்தோலிக் கல்வி திட்டத்தினை சிறந்த முறையில் அமுல்படுத்தியதற்காக, இந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.



இதுகுறித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் ஜசிந்தா கார்ட்ரஸ் தினமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “அனைத்து இந்திய கத்தோலிக் கல்வி திட்டத்தை தரமான முறையில் அமல்படுத்திய கல்லூரியை தேர்வு செய்து, இவ்விருதினை வழங்க சி.பி.சி.ஐ., உத்தேசித்தது.

அதனடிப்படையில், நாடு முழுவதிலும் உள்ள கத்தோலிக் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி முறைகள், இதர திறன்மேம்பாட்டு பயிற்சிகள், பேராசிரியர்களின் தரம், நிர்வாக அலுவலர்களின் எண்ணிக்கை, தொழில்நுட்ப கட்டமைப்பு உட்பட ஏராளமான அம்சங்கள் ஆராயப்பட்டன. அதில், நாட்டிலேயே முதல் கல்வி நிறுவனமாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு, ‘பிரைடு ஆப் தி கத்தோலிக் சர்ச்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக பல சாதனைகளை புரிந்துள்ள இக்கல்லூரிக்கு கிடைத்துள்ள இந்த விருது, கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களையும், அலுவலர்களையும், மாணவிகளையும் மேலும் பெருமையடைச் செய்துள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், “சமூக மாற்றத்திற்கும், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் பங்கு அனைவரும் அறிந்ததே! கல்வியில் மட்டுமின்றி, இதர திறன்களை ஊக்குவிப்பதிலும், இக்கல்லூரி முழுமுயற்சியுடன் செயல்படுகிறது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ‘வேல்யு எஜுகேஷன்’ இணைக்கப்பட்டுள்ளது, ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமைந்துள்ளது”, என்று கல்லூரி முதல்வர் ஜசிந்தா கார்ட்ரஸ் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...