தேசிய திறனாய்வு தேர்வு; நவ., 1ல் ஹால் டிக்கெட் !

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்தோர், நவ., 1 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. அதில்,
இரண்டாம் கட்ட தேர்வில், வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.




அந்த உதவித்தொகையை, பி.ஹெச்.டி., உயர்கல்வி முடிக்கும் வரை பெறலாம். முதல் கட்ட மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. அத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், நவ., 1 முதல், அவர்களது ஹால் டிக்கெட்டுகளை, தேர்வுத்துறை இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




பள்ளி மூலம், விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...