ஊதியமற்ற உழைப்பில் இந்திய பெண்கள் 'நம்பர்- 1. !!

இந்திய பெண்கள், ஓராண்டில், ஆண்களை விட, சராசரியாக, 50 நாட்கள் கூடுதலாக உழைக்கின்றனர்' என, உலக பொருளாதார குழுமத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: உலகளவில், ஆண்களை விட பெண்கள், ஓராண்டில் கூடுதலாக, 39 நாட்கள் உழைக்கின்றனர்; இது,
இந்தியா, போர்ச்சுக்கல், எஸ்டோனியா ஆகிய மூன்று நாடுகளில், ஆண்டுக்கு, 50 நாட்கள் என்றளவில் உயர்ந்து காணப்படுகிறது. உலகளவில், ஆறு நாடுகளில் மட்டுமே, ஆண்கள், பெண்களை விட, அதிகம் உழைக்கின்றனர். அவற்றில், மூன்று நாடுகளில், குழந்தை பராமரிப்பு விடுப்பை, இரு பாலினரும் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊதியமுள்ள வேலைகளில், பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்கள், 34 சதவீதம் அதிகமாக உழைக்கின்றனர். இருந்த போதிலும், ஊதியம் இல்லாமல் உழைப்பதில், பெண்களின் பங்கு, ஆண்களை விட அதிகம் உள்ளது. வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, வயதான பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரை கவனித்துக் கொள்வது போன்ற, ஊதியம் இல்லாத பணிகளில், ஆண்களை விட பெண்களின் உழைப்பு, மிகவும் அதிகமாக உள்ளது.

இது போன்ற வேலைகளை, பெண்கள் ஊதியமின்றி, எதையும் எதிர்பார்க்காமல் செய்கின்றனர். இந்த பாரபட்சமான போக்கு மறைந்து, அனைத்து விதமான பணிகளிலும், ஆணுக்கு சமமாக பெண்கள் திகழ வேண்டுமெனில், இரு பாலினத்தினர் இடையிலான, பொருளாதார வேற்றுமைகள் மறைய வேண்டும். உலகளவில், அது போன்ற ஒரு நிலையை அடைய, 170 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...