பள்ளி மாணவர்களுக்கான 'டி-20':இன்று துவக்கம் !

தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான 'டி- 20' கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்குகிறது.இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 'டி- 20' கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. மாநிலத்தில் 152 பள்ளி அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை, கோயம்பத்துார், சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், நாகப்பட்டினம்,
திருநெல்வேலி, வேலுார் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

முதல் போட்டி: ஜூன் 29ல் சென்னையில் முதல் போட்டி துவங்கியது. இதில் 31 போட்டிகளில் 32

பள்ளிகள் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.



இரண்டாவது போட்டிகள்: ஏற்கனவே வேலுார், நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலியில் 15 போட்டிகள் முடிந்து விட்டன. அடுத்த 15 போட்டிகள் மதுரை, கோயம்பத்துார், சேலம், திண்டுக்கல்லில் (அக்., 17ல்) இன்று துவங்குகின்றன. அக்.,19ல் ஈரோட்டில் போட்டி நடக்கிறது.

இறுதிப்போட்டி: 11 மாவட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் டிச.,26ல் திருநெல்வேலியில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்கின்றன.



இதில் 15 லீக் போட்டிகளும், 3 'நாக் அவுட்' போட்டிகளும் நடக்க உள்ளன.சென்னை அணி ஒருங்கிணைப்பாளர்கள் வருண்குமார், அருண்குமார், பழநிஅமர்நாத், மணிகண்டன், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் வெங்கட்டராமன் ஆகியோர் கூறியதாவது:போட்டியில் பங்கேற்கும் அணிகள் நுழைவு கட்டணம் செலுத்த தேவையில்லை. 'வெள்ளை வண்ணத்திலான டி - ஷர்ட்ஸ்' தொப்பிகள் முதல் போட்டியில் இருந்தே வழங்கப்படும். வெள்ளை நிறத்திலான பேன்ட் கட்டாயமாக வீரர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர்களுக்கு சிறப்பு பரிசுகள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் வழங்கப்படும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...