7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டம்:7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து அமைச்சரவை
செயலாளர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக உயர்கிறது. இதனையடுத்து, ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாநில கவர்னர்களின் மாத சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் சட்டத்தை தயாரித்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
பரிசீலனை:
இதேபோல் துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என தனியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், ராஜ்யசபா தலைவர் என்ற முறையில், அவரது மாதசம்பளம் ரூ.1.25 லட்சமாக உள்ளது. துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால், பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. எம்.பி.,க்கள் சம்பளத்தை உயர்த்தும் போது துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் சம்பளம் கடைசியாக கடந்த 2008 ஆண்டு 3 மடங்கு உயர்த்தப்பட்டது. அதுவரை, ஜனாதிபதி சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரமாகவும், கவர்னர் சம்பளம் ரூ.36 ஆயிரமாக இருந்தது.