பிளஸ்–2 மாணவர்களுக்கு வினா–விடை புத்தகம் மாவட்டங்களில் 25–ந் தேதி முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வினா–விடை புத்தகம்
பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்படும் வண்ணம் வினா வங்கி (வினா–விடை), மாதிரி வினா ஏடுகள் மற்றும் தீர்வுப் புத்தகங்களை தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் ஆண்டுதோறும் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.
இவ்வாண்டிக்குரிய பிளஸ்–2 அறிவியல் பாட பிரிவு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாவங்கி ஏடுகள் அச்சிடும் பணி முடிவடைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், மாவட்டத்திற்கு ஒரு மையம் வீதம் வினாவங்கி ஏடுகள் அனுப்பும் பணி முடியும் தருவாயில் உள்ளது. 25–ந் தேதி முதல் பிளஸ்–2 அறிவியல் பாட பிரிவு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாவங்கி ஏடுகள் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
விலை விவரம்
*பிளஸ்–2 மாணவர்களுக்குரிய வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகக்கணிதம் ஆகிய பாட பிரிவுகளுக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வினாவங்கி ஏடுகள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.*
*இவ்வாண்டும் பிளஸ்–2 மாணவர்களுக்கு வினாவங்கி, மாதிரி வினா ஏடுகள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாடவரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி மற்றும் அனைத்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும், தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.