புதுடெல்லி,பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்ற புதிய செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி நிறுவன எண்களுக்கு தொடர்பு கொண்டால், சரியான இணைப்பு வசதி
வழங்கப்படுவதில்லை. ஜியோவின் வளர்ச்சியை முறியடிப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக ‘ஜியோ’ நிறுவனம் சார்பில் டிராய் (இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மேற்கண்ட 3 நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.