4.52 கோடி பேர் மட்டுமே ரேஷனில் ஆதார் பதிவு!!

ரேஷன் கார்டுகளில், 7.67 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில், 4.52 கோடி பேர் மட்டும், 'ஆதார்' விபரத்தை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், 2.04 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில், 7.67 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், தற்போதுள்ள ரேஷன் கார்டு எண், 'ஆதார்' அட்டை, மொபைல் போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை ஆகிய
விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வரை, 2.02 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு செய்த நிலையில், 4.52 கோடி பேர், 'ஆதார்' விபரத்தையும், 1.58 கோடி பேர் மொபைல் போன் எண்ணையும் வழங்கிஉள்ளனர்.



இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, வீட்டில் உள்ள அனைவரும், ரேஷன் கடைகளில், ஆதார் விபரத்தை வழங்க வேண்டும்; பல வீடுகளில், குடும்ப தலைவர் மட்டும் ஆதார் விபரத்தை தந்துள்ளனர். மற்றவர்களின், ஆதார் விபரத்தை பதிவு செய்யுமாறு, பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். இதனால், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



விளம்பரம்! : ரேஷன் கடைகளில், ஆதார் விபரத்தை பதிவு செய்யுமாறு பத்திரிகைகள், சுவரொட்டி மூலம் விளம்பரப்படுத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...