வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது; இது, வடகிழக்கு பருவமழையாக
மாறுமா என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க, முன்னேற்பாடுகளை, அரசு துவக்கி உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில், பருவ மாற்றத்திற்கான சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து, இந்திய
வானிலை ஆய்வு மைய அறிக்கையில், 'வங்கக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அதன் அருகில், மற்றொரு மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. எனவே, 48 மணி நேரத்திற்குள், மேல் அடுக்கு சுழற்சியும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்து உள்ளது.