என்.ஐ.பி., நடத்தும் குரூப் 4 மாதிரி தேர்வு !

மதுரையில் தினமலர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் (என்.ஐ.பி.,) இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வு நாளை (அக்., 22) நடக்கிறது.

தமிழக அரசின் குரூப் 4 பிரிவில் எழுத்தர், தட்டச்சர் போன்ற 5500 காலிப் பணியிடங்களுக்கு நவ.,6ல் எழுத்து தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதில் 12 லட்சம் பேர் பங்கேற்

கின்றனர்.
அரசு பணிக்கு செல்ல ஆர்வமுள்ள வாசகர்களின் கனவை நனவாக்கும் வகையில்,

தினமலர் மாதிரி- வினா விடை வெளியிட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வை எளிதாக எதிர்கொள்ளவும், நேரத்தை திட்டமிடவும், தேர்வுக்கு முன்பயிற்சியாகவும், மாதிரி தேர்வை தினமலர் நடத்துகிறது. மற்றபடி இந்த மாதிரி தேர்வுக்கும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான்கு ஆண்டுகளாக மாதிரி தேர்வை தினமலர் நடத்தி வருவது

குறிப்பிடத்தக்கது.மாதிரி தேர்வில் பங்கேற்க, ஏற்கனவே முன்பதிவு செய்து பதிவெண் பெற்ற 1000 பேருக்கு மட்டுமே அனுமதி. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அலுவலகத்தில், நாளை காலை 10:00 முதல் 1:30 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்போர் பால் பாயின்ட் பேனாவுடன் வர வேண்டும். பொது அறிவில் 100, தமிழில் 100 என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. தவறான வினாக்களுக்கு 'நெகட்டிவ்' மதிப்பெண் இல்லை. தமிழில் மட்டுமே வினாத்தாள் இருக்கும்.



என்.ஐ.பி., இயக்குனர் வெங்கடாசலம் கூறுகையில், "சிறந்த பயிற்சியாளர்களால் வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்போருக்கு 50 பக்கம் 'நடப்பு நிகழ்வு' புத்தகம் இலவசமாக வழங்கப்படும்," என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...