ஒட்டு மொத்தமாக விடுப்பு போட்டுவிட்டு சென்னையில் பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரிக்கை!!
பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு போட்டுவிட்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டம்
7–வது சம்பள ஆய்வுக்குழுவின் அறிக்கையை மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விரைந்து அறிவிக்கக்கோரி, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போட்டு போராட்டம் நடத்தினார்கள்.தமிழகத்திலும் இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகம் முன்பு நேற்று
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கங்கள்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தமிழ்நாடு, மெட்ராஸ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரிகள் ஆசிரியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு –தமிழ்நாடு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் காந்தி ராஜ், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.7–வது ஊதியக்குழு
ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் கூறியதாவது:– மத்திய அரசு ஊழியர்களுக்கு 7–வது சம்பளக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி விட்டனர். ஆனால் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அறிவிக்கவே இல்லை. எவ்வளவு சம்பளம் அதிகரிக்கிறது என்ற அறிக்கை இன்னும் தரப்படவில்லை.எனவே மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7–வது சம்பளக்குழுவின் அறிக்கையை விரைவாக அதே நேரத்தில் எங்களை கவரும் வகையில் அறிவிக்கவேண்டும்.ஓய்வூதிய திட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.ஆராய்ச்சி தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள ஏ.பி.ஐ. திட்டத்தை கைவிடுதல், புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தும் முன்பாக ஆசிரியர்கள் சங்கத்தை கலந்து ஆலோசித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தமிழ்நாட்டில் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தனர். ஆனால் சில ஆசிரியர்கள் வேலை பார்த்தனர். இதனால் வந்திருந்த ஆசிரியர்களை கொண்டு கல்லூரிகள் இயங்கின.