தமிழகத்தில், 'ஆதார்' அட்டை வினியோகிக்கும் பணி, மாநில அரசு வசம் வந்த போதிலும், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில், ஆதார் அட்டையை, சிறப்பு அடையாள பதிவு ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ., என்ற தேசிய அமைப்பு, பெங்களூரைச் சேர்ந்த, 'பெல்' நிறுவன உதவியுடன் தயாரித்து வழங்கியது. தற்போது, ஆதார் வழங்கும் பணியை, தமிழக அரசு ஏற்றுள்ளது; ஆனாலும், அதற்கான பணிகளை துவங்கவில்லை.
சிக்கல்கள்
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 2015 கணக்கெடுப்புப்படி, 7.65 கோடி பேர் வசிக்கின்றனர்; அதில், 1.20 கோடி பேருக்கு, இன்னும் ஆதார் வழங்க வேண்டியுள்ளது.
இதுவரை, ஆதார் விபரங்களை, 'பெல்' நிறுவனத்தினர் சேகரித்தனர். அவர்களிடம் இருந்து எங்களுக்கு வந்துள்ளது. ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பெல் நிறுவனம்
அவர்கள், செப்., 30 வரை பதிவு செய்த விபரங்களுடன், 'லேப்டாப்' மற்றும் கருவிழி பதிவு கருவி உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்; எனவே அதுபோன்ற, 1,500 கருவிகளை, மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் தர வேண்டிய, 'பாஸ்வேர்டு' இன்னும் முழுமையாக தரப்படவில்லை. பெல் நிறுவனம், குறுந்தகட்டில் ஆதார் விபரங்களை பதிவு செய்து, பின், 'சர்வரில்' பதிவேற்றம் செய்தது. சில சமயங்களில், குறுந்தகடு தொலைந்து போனதால், பல ஆயிரம் பேருக்கு ஆதார் கார்டு கிடைக்கவில்லை. அந்த பிரச்னையை தவிர்க்க, ஆதார் மையங்களை, சென்னை துறைமுகத்தில் உள்ள சர்வருடன் நேரடியாக இணைத்து வருகிறோம். அதனால், விபரங்கள் பாதுகாப்பாக இருக்கும். இந்த பணிகள் விரைவில் முடியும். பின், அனைத்து மையங்களும் படிப்படியாக செயல்பட துவங்கும். இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
நிரந்தர மையம்! : 'எல்காட்' என்ற தமிழகமின்னணு நிறுவனம், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 640 நிரந்தர ஆதார்
மையங்கள் நிர்வகிக்கப்பட உள்ளன; அவை, பொதுமக்கள் வசதிக்காக தாலுகா, நகராட்சி மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இயங்கும்.
'ரகசியம் பாதுகாக்கப்படும்' : ஆதார் தொடர்பான சட்ட திருத்தத்தில், புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதுகுறித்து, சிறப்பு அடையாள பதிவு ஆணையம் கூறியுள்ளதாவது:ஆதார் அட்டைதாரர்களின் முகவரி மற்றும் எண்கள் மட்டுமே, முக்கிய நோக்கங்களுக்கு பயன்படுத்த, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அதற்காக, அந்த நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்; அதற்கான ஒப்புதல் பெற்ற பின், ஆதார் எண்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில், ஆதார் அட்டைதாரர்களின் உடற்குறியீடுகளான கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற விபரங்கள், எந்த காரணத்தை கொண்டும், யாருக்கும் வழங்கப்படாது; தனி மனித உடற்குறியீடு விபரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும்.இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.