வாக்காளர் பெயர் நீக்கத்திற்கு லஞ்சம்: தேர்தல் துணை தாசில்தார் மீது வழக்கு !

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் கமலேஷ்,35, பணம் வாங்கி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கமலேஷ், கள்ளிக்குடி அருகே கூடக்கோவில் தலையாரி கரந்தமலை,45, உள்ளாட்சி தேர்தல் பணி செய்தபோது, கள்ளிக்குடி வீரப்பெருமாள்புரத்தில் 36 பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினர்.
தலா ஒரு நபரின் பெயரை நீக்க ரூ.1000 லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
அப்பகுதி மக்கள் தாசில்தார் மலர்விழி, மதுரை கலெக்டர் வீரராகவராவிடம் புகார் மனு அளித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய முழு அதிகாரம் ஆர்.டி.ஓ.,விற்கு தான் உள்ளது. தேர்தல் துணை தாசில்தார், இரட்டை ஓட்டுகள் இருந்ததால் தான் பெயர் நீக்கம் செய்யப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என கூறியுள்ளார். ஆனாலும் ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாரின் விசாரணைக்கு, இருவரும் வராததால், திருமங்கலம் தாசில்தார் மலர்விழி புகாரில், திருமங்கலம் டவுன் போலீசார் கமலேஷ், கரந்தமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...