ஒரு மாத காலத்துக்கு ஆதார் அட்டை பெறலாம்!!

அரசின் நலத்திட்டங்களைப் பயன் பெறுவதற்காக ஆதார் கார்டு கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்குவதற்காகவே, ஆதார் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது என அரசு தெரிவித்தது. முதலில் ஆதார் கார்டு முக்கியத்துவம் இல்லாததாகக் காணப்பட்டது. ஆனால், தற்போது மொபைல் சிம்கார்டு வாங்குவதிலிருந்து திருமணம் முடிப்பது வரைக்கும் ஆதார் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 106 கோடி மக்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஆதார் ஆணையம் வெள்ளிக்கிழமை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது: “தற்போது வரை நாடு முழுவதும் 106.69 கோடி பேருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரத் தகவல்களின்படி, மேலும், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட 22 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும்18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒருவர்கூட விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்துக்கும் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஆதார் கார்டு பெறத் தவறியாவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று ஆதார் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவிகிதமாகும். ஆனால், இந்தியாவில் 106 கோடி மக்கள் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். நாட்டில் ஆதார் அட்டை பெறாமல் இன்னும் 15 கோடி மக்கள் உள்ளனர். இருப்பினும், தற்போது பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு பெறலாம் என்ற தகவல் வெளியானதால், ஆதார் கார்டு பெறாமல் 15 கோடி மக்கள் உள்ளனர் என்பது உறுதியாகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...