சென்னை, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் புதிய ஆட்சி அமைந்த நிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 25.5.16 அன்று தொடங்கியது. சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள், அன்று எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்றனர்.அதன் பின்னர் கடந்த ஜூன் 3-ந் தேதியன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகராக ப.தனபால் தேர்வு
செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜூன் 17-ந் தேதி சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஜூன் 23-ந் தேதி வரை நடைபெற்றது.தமிழக அரசின் பட்ஜெட் ஜூலை 21-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட்ட அந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.சட்டசபை நிகழ்வுகள் ஆகஸ்டு 16-ந் தேதியன்று முடிந்த நிலையில், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 25.5.16 அன்று சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை இந்திய அரசியல் சாசனத்தின் 174(2) (ஏ) ஷரத்தின்படி, தமிழக கவர்னர் இறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது