வெளிநாட்டு பல்கலை., கூடாது; தமிழக அரசு எதிர்ப்பு !!

டில்லியில், நேற்று நடந்த, மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகம் ஏற்காது

தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன.


எனவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையிலான, பல்நோக்கு முனைப்புடன் கூடிய, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழகம் ஏற்காது.

அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களுக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் நீடிக்க வேண்டும்.

இந்த நடை முறையில் மாறுதல்கள் கூடாது. எனவே, இந்திய கல்விச் சேவை என்ற மத்திய அரசின் கருத்துரு வாக்கத்தை தமிழகம் எதிர்க்கிறது.

தேவையில்லை

உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் பிரச்னைகளை களைவதற்கு, தமிழகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான, இரு கமிட்டிகள் ஏற்கனவே உள்ளன; புதிய தீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு, அனுமதி வழங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சமூக கண்ணோட்டத்தை காட்டிலும், வர்த்தக நோக்கமே பெரிதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...