டெல்லியில் நடந்த மத்திய கல்வி ஆலோனை வாரியத்தின் 64வது கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், அன்பழகன் கலந்து கொண்டு, தமிழக அரசின் கருத்துக்களைத் தெரிவித்தனர். மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 64வது கூட்டம் நேற்று டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் கல்வி
அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு இந்தியா முழுவதும் கல்விக் கொள்கையில் சீர்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான புதிய கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது.இந்த கல்விக் கொள்கை குறித்தும், கல்விதுறை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ள 36 அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 8 வகுப்பு வரை அனைத்து மாணர்களையும் கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், சமஸ்கிருத மொழியை இந்தியா முழுவதும் திணிப்பதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை பின்பற்றலாம் என்றும், அதற்கு அதற்கு மேல் கட்டாய தேர்ச்சி வகுப்பை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை வாரியம் பரிந்துரைத்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர், கட்டாய தேர்ச்சி முறையால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என்று பல மாநிலங்கள் கவலை தெரிவித்ததாக கூறினார். புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வரும் இந்த நிலையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் இந்த கூட்டம் முக்கியமானது என்று தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், " இலவச மடிகணினி திட்டத்திற்கு கூடுதல் நீதி கேட்டிருக்கிறோம் . தமிழகம் மாதிரி 16 விதமான கல்வித்திட்டங்கள் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை.தற்போது கல்வி கற்கும் குழந்தைகளுக்காக அம்மா கிட் தர இருக்கிறோம். அம்மா கணித கிட் , அறிவியல் கிட் போன்றவை வழங்கப்பட உள்ளன. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம்.மேலும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்" என்று கூறினார்.