உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்கள்; முழு கட்டுப்பாடும் கலெக்டர் கையில் !!

இனிமே, நாங்க தான் !

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வரும், 24ம் தேதிக்கு பிறகு, உள்ளாட்சி நிர்வாகம், தனி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. 1996க்கு பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் கலெக்டரின் ஆட்சி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த மாதம், 25ல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
வேட்புமனு நிறைவடைந்த நிலையில், தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.மாநில தேர்தல் கமிஷனின் மேல்முறையீட்டு மனு விசாரணை நிலுவையில் உள்ளது. வரும், 17 மற்றும், 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக, மாநில தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது. நேற்று முதல், சகஜ நிலை திரும்பியுள்ளது.




உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தல் ரத்தாகியுள்ளதால், வரும், 24ம் தேதிக்கு பிறகு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகம் செய்ய, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளில் அந்தந்த கமிஷனர்களும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களும், தனி அ<லுவலராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.




இதுகுறித்து, ஓய்வு பெற்ற ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 1991-96 வரை, உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்ததால், உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன்பின், தனி அலுவலர் நியமிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. சட்டசபை தேர்தல் முடிந்த சில மாத இடைவெளியில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனி அலுவலரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




ஊராட்சிகளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலரும் (கி.ஊ.,); ஒன்றியத்துக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.,); மாவட்ட ஊராட்சிக்கு, மாவட்ட ஊராட்சி செயலாளர், தனி அலுவலராக நியமிக்க வாய்ப்புள்ளது. வரும், 18ல் இறுதி தீர்ப்பு கிடைத்தாலும், அதன் பிறகு, கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்தி, பிறகு தேர்தல் அறிவிக்கப்படும். அதுவரையாவது, தனி அலுவலர் நியமிக்க வேண்டியுள்ளது.




மத்திய, மாநில அரசு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனி அலுவலரிடம், காசோலை அதிகாரம் இருக்கும். தனி அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரமும், கலெக்டர் வசம் இருக்கும். தேர்தல் ரத்து ஆனதால், மேலும், 18 நாட்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...