''அரசு அதிகாரிகள், சில நேரங்களில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அந்த முடிவு, நாட்டு நலன் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஐ.ஏ.எஸ்., தேர்தவில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சகங்களில், துணை செயலர்களாக
பணியாற்றிய அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டின் கட்டமைப்பில், ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நல்ல திட்டங்களை, அரசுக்கு பரிந்துரைப்பதிலும், அவற்றை மிக நேர்த்தியாக செயல்படுத்துவதிலும், அரசு அதிகாரிகளின் பங்களிப்பு மிக அவசியமானது.
மத்திய அமைச்சகங்களில் அளிக்கப்பட்ட பயிற்சிக்குப் பின், வெவ்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகளாகபொறுப்பேற்கவுள்ள நீங்கள், சில நேரங்களில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, நாட்டு நலன் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், உங்கள் முடிவு இருக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அரசியல் தலையீடு களுக்காக, கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தரக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.