கடந்த ஜூலை மாதம், எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக நாடு முழுவதும் 4.75 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மையங்களில் இருந்து தரவுகள் திருடப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி 6 லட்சம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
எஸ்.பி.ஐ. வங்கி, ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை சில தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற பரிவர்த்தனைகளில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாலும், மால்வேர் பாதிப்புகள் ஏற்பட்டதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட சில ஏடிஎம் கார்டுகளை எஸ்.பி.ஐ. முடக்கியது. ஏடிஎம் கார்டுகளை முடக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் ஏடிஎம் கொள்ளை நடைபெற வாய்ப்புள்ளது என ஸ்டேட் வங்கியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஷிவ் குமார் பாசின் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல்ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு, புதிய ஏடிஎம் கார்டை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை பின் (PIN) எனப்படும் பாதுகாப்பு எண்ணை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக மற்ற வங்கி ஏடிஎம் மையங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஏடிஎம் மையங்களில் தகவல் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ’எஸ்’ பேங்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.