எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஆக்ஸ்போர்டு,
கேம்பிரிட்ஜ், லண்டன் காலேஜ், லண்டன் பல்கலை., கிங் காலேஜ் ஆகியவற்றில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இதில், 44 வயதில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒருவர் உலக வரலாற்றில், உயிர்க்கொல்லி நோயிலிருந்து முதற்கட்ட சோதனையில் குணமடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இவர், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தநிலையில், கடந்த இரு வாரங்களுக்குமுன்பு எடுத்த ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி வைரஸ் காணப்படவில்லை.
மனித உடலில் ஏற்படும் இந்த உயிர்க்கொல்லி நோயானது, குணப்படுத்தமுடியாத நோயாகவே இருந்து வந்தது. டார்மெண்ட் செல்கள் எனப்படும் செல்களில் இருந்து இந்த எச்ஐவி வைரஸ்களை அகற்றுவது மிகவும் கடினம். இதையும் அழிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அதாவது, முதன்முறையாக எச்ஐவி வைரஸைக் கொல்லும் மருந்தை கண்டுபிடித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதற்கட்ட மருந்துகள் அளிக்கப்பட்டநிலையில் அவருடைய உடம்பில் எச்ஐவி முற்றிலுமாக அழிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவித்தனர். இது முதற்கட்ட சோதனை என்பதால், தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சையளித்து, எச்ஐவி பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறினர். மேற்கொண்டு வரும் மருந்துகளால் எச்ஐவி பூரண குணமடைந்தால் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் வாழ்நாளில் இந்த மருந்துகளைப் பெற 380,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பு மூன்று கோடி ரூபாய் ) செலவாகும் எனக் கூறப்படுகிறது.