எலக்ட்ரிக் கார், பஸ், லாரி என சுற்றுச்சூழலை பாதுகாக்கும்நோக்கில் மேலைநாடுகளில் வாகனங்கள் எலக்ட்ரிக்மூலம் இயங்கும்விதமாக உருமாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் கடந்தால் அனைத்து பைக், கார் என அனைத்து வாகனங்களும் பேட்டரிமூலம் ரீசார்ஜ் செய்துகொண்டு இயங்கும்படியாக மாறிவிடும் என்றுதான் தோன்றுகிறது.
இதன்வரிசையில் தற்போது பஸ், லாரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேலாண்ட் வாகனத் தயாரிப்பு நிறுவனம் ‘Circuit’ என்ற பெயரில் எலக்ட்ரிக் பஸ் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் எலக்ட்ரிக் பஸ் ஆகும். இந்தப் பேருந்து இந்திய சாலைகளுக்குத் தகுந்தபடியும், பயணிகளுக்குத் தகுந்தபடியும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்துகொண்டால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
இதுகுறித்து, மேலும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கூறியது, இது சுற்றுச்சூழலுக்கான எங்களின் படைப்பாகும். 100 சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் தொடர்ந்து பல பஸ்கள் தயாரிக்கவிருக்கிறோம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.