கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தனது சேவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த ஜியோ, செப்டம்பர் 5ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்கார்டை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகையாக வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அனைத்து சேவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஜியோ
அறிவித்தது. இந்நிலையில் ஜியோவின் இந்த இலவச சேவை வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படவுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைக் கவர அதிகளவிலான சலுகைகளையும் இலவசங்களையும் வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால், ஜியோவின் இந்த இலவச சேவை விதிகளுக்கு புறம்பானது என்றும் இந்திய டெலிகாம் துறையின் சட்டத்திட்டங்கள்படி எந்த ஒரு நிறுவனமும் அறிமுக சலுகையாக இலவச திட்டங்களை 90 நாட்களுக்கு அதிகமாக அளிக்கக்கூடாது என்றும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், நேற்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு டிராய் அனுப்பிய கடிதத்தில், “திருத்தப்பட்ட ஜியோ இலவச சேவையை அடுத்து ஜியோவின் அனைத்து இலவச சேவையும் வரும் டிசம்பர் 3ஆம் தேதியுடன் (90 நாட்களுக்குள்) நிறைவுபெற உள்ளது. இதனால் ஜியோவின் இலவச சேவை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜியோவின் திருத்தப்பட்ட இலவச சேவை திட்டத்துக்கு டிராய் ஒப்புதல் வழங்கியதை அடுத்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை ஜியோவின் வெல்கம் ஆப்பர் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். தற்போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அனைத்து சேவையும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
வெல்கம் ஆப்பர் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் காலக்கெடுவை குறைத்துள்ள ஜியோ, வாடிக்கையாளர்களுக்குத் தற்போது இலவசமாக வழங்கும் சேவையை நீடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்குப் போதிய அளவிலான இன்டெர்கனக்ஷென் இணைப்புகள் வழங்காமல் ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச சேவையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனால் ஜியோவின் இலவச சேவை டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு நீடிக்கப்படலாம்” என்று தெரிவித்தது.